நீங்க அடுத்த தளபதியா? நச்சுன்னு பதிலளித்த SK| Are you the next Thalapathy? SK replied Audience Shocked

  மாலை மலர்
நீங்க அடுத்த தளபதியா? நச்சுன்னு பதிலளித்த SK| Are you the next Thalapathy? SK replied Audience Shocked

இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள திரைப்படம் அமரன். உலக நாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ்குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.அமரன் திரைப்படம் அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி வெளியாகவுள்ளது.தற்பொழுது சாய் பல்லவி கதாப்பாத்திரத்தின் வீடியோவை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது வெளியிட்டுள்ளது. சாய் பல்லவி படத்தில் இந்து ரெபேக்கா வர்கீஸ் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. இன்று திருச்சியில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில். சிவகார்த்திகேயனிடம் கோட் திரைப்படத்தில் நடிகர் விஜய் அவரிடம் கூறிய வசனங்களை பற்றிக் கேட்டார்.அதற்கு அவர், அந்த திரைப்படத்தில் நடித்ததுற்கு பெருமை படுகிறேன். விஜய் சாருக்கும், வெங்கட் பிரபு சாருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அப்பொழுது ரசிகர் ஒருவர் அவரிடம் நீங்கள்தான் அடுத்த தளபதி என கூறினார்.அதற்கு சிவகார்த்திகேயன் " அதெல்லாம் கிடையவே கிடையாது என்றும் ஒரே தளபதி, ஒரே தல, ஒரே உலகநாயகன், ஒரே சூப்பர்ஸ்டார்" என்று பதிலளித்துள்ளார். இந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. Ore Thalapathy Thaan... Ore Thala Thaan... Ore Ulaga Nayagan Thaan... Ore Super Star Thaan... - #Sivakarthikeyan About The #TheGOAT Scene pic.twitter.com/3K5FuB5PdXஉங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்ஐ க்ளிக் செய்யவும்.

மூலக்கதை